search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
    X

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்

    புனேயில் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை காண அந்த அணியின் ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயில் மூலம் புனே செல்ல சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #IPL #CSK
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. ஒரே ஒரு ஆட்டம் மட்டும் கடந்த 10-ந்தேதி நடத்தப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் புனேயில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூர் மைதானமான புனேயில் விளையாடும் ஆட்டத்தை காண சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அவர்கள் புனேக்கு செல்ல சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்தது.



    அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் புனேயில் நாளை நடைபெறும் போட்டியை காண நன்கொடை டிக்கெட் வழங்கப்பட்டது. சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான சிறப்பு ரெயில் இன்று காலை சென்ட்ரலில் இருந்து புனேக்கு புறப்பட்டது. இந்த சிறப்பு ரெயில் ‘‘விசில்போடு’’ எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் உடை மற்றும் கொடியுடன் ரசிகர்கள் புறப்பட்டனர். தீவிர ரசிகரான சரவணன் உள்ளிட்ட 1000 ரசிகர்கள் சென்ட்ரலில் இருந்து உற்சாகமாக வழியனுப்பி வைக்கப்பட்டனர்.



    விசில்போடு எக்ஸ்பிரஸ் நாளை காலை 8.30 மணிக்கு புனே சென்றடையும். ரசிகர்கள் புனேயில் தங்குவதற்கும், உணவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை புனேயில் இருந்து திரும்பும். #IPL
    Next Story
    ×