search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பளுதூக்கும் வீரர் விகாஸ் ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்
    X

    பளுதூக்கும் வீரர் விகாஸ் ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்

    வெண்கல பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் விகாஸ் ஊக்கமருந்து விவகாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். #CWG2018 #GC2018
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. கோல்டு கோஸ்டில் வீரர்கள் தங்குவதற்கு விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு நகரத்தில் ஊசி கிடந்ததாக செய்தி வெளியானது. விளையாட்டு விதிமுறையின்படி வீரர்கள் ஊசி பயன்படுத்தக்கூடாது. இந்த விவகாரத்தில் காமன்வெல்த் அதிகாரிகள் இந்தியாவின் மூன்று வீரர்கள் மீது சந்தேகக்கண் வைத்தனர். தடகள வீரர்களான கே.டி. இர்பான், வி. ராகேஷ் ஆகியோரை போட்டியில் இருந்து நிர்வாகம் வெளியேற்றியது.

    இதற்கிடையே 94 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெண்கல பதக்கம் வென்றார். இவர் கடந்த 11-ந்தேதி கோல்டு கோஸ்டில் இருந்து வெளியேற தயாராக இருந்தார். இந்நிலையில் 3-வது நபராக விகாஸ் மீது காமன்வெல்த் போட்டி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

    அதிகாரிகள் விகாஸின் பேக்-ஐ சோதனை செய்தனர். மேலும், ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தினர். மெடிக்கல் கமிஷன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவரது பையில் இருந்த எந்தவித பொருட்களும் எடுக்கவில்லை. ஊக்கமருந்து சோதனையிலும் பிரச்சினையில்லை. இதனால் விகாஸ் வெண்கல பதக்கத்தோடு இந்தியா திரும்புகிறார்.
    Next Story
    ×