search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் ஹாக்கி - 2 பதக்கங்களை உறுதிசெய்த இந்திய ஆண்கள், மகளிர் அணி
    X

    காமன்வெல்த் ஹாக்கி - 2 பதக்கங்களை உறுதிசெய்த இந்திய ஆண்கள், மகளிர் அணி

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளன. #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG

    கோல்ட் கோஸ்ட்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளன.

    காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 12 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. 

    லீக் பிரிவு போட்டியில் இந்திய ஆண்கள் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இருப்பினும் இந்திய ஆண்கள் அணி இறுதி கட்ட ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல் அடித்தது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பி பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு அரையிறுதி போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. இந்திய அணியில் ருபிந்தர் சிங், மன்பிரீத் சிங், மந்தீப் சிங், வருண் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 



    முன்னதாக இந்திய மகளிர் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG
    Next Story
    ×