search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் பேட்மிண்டன் - பிரனோய், ருத்விகா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    காமன்வெல்த் பேட்மிண்டன் - பிரனோய், ருத்விகா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரனோய், ருத்விகா காடே ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG

    கோல்ட் கோஸ்ட்:

    காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 12 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. 

    இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனோய், மொரீசியசின் கிறிஸ்டோபர் ஜீன் பால் உடன் மோதினார். இப்போட்டியில் பிரனோய் 21-14, 21-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை ருத்விகா காடே, கானாவின் கிரேஸ் அடிபகாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் ருத்விகா அதிரடியாக விளையாடினார். இதனால் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்ற ருத்விகா காடே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோரும் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனால்  இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG
    Next Story
    ×