search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னை அண்ணாசாலையில் மறியல்- டிக்கெட் எரிப்பு
    X

    ஐபிஎல் போட்டியை எதிர்த்து சென்னை அண்ணாசாலையில் மறியல்- டிக்கெட் எரிப்பு

    ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டிக்கெட் எரிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #CSK
    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் போட்டி நடந்தே தீரும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டியை காண ரசிகர்கள் அண்ணாசாலை வழியாக மைதானம் வந்த வண்ணம் உள்ளனர். அண்ணாசாலையில் இருந்து போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அண்ணாசாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து எஸ்டிபிஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஐபிஎல் டிக்கெட்டுக்களை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரு வாகனமும் சேதப்படுத்தப்பட்டதுங இதனால் அண்ணாசாலையில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    Next Story
    ×