search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை துவம்சம் செய்தது இங்கிலாந்து
    X

    2-வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை துவம்சம் செய்தது இங்கிலாந்து

    2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணியை 113 ரன்னுக்குள் சுருட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. #INDWvENGW
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தேவிகா வைத்யா, ஸ்மிரிதி வந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 8.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 31 ரன்கள் எடுத்தது. தேவிகா வைத்யா 31 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இவர் அவுட்டானதும் அடுத்து வந்த மிதலி ராஜ் (4), ஹர்மன்ப்ரீத் கவுர் (3), வேதா கிருஷ்ணமூர்த்தி (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த தீப்தி ஷர்மா நிலைத்து நிற்க, தொடக்க விராங்கனை ஸ்மிரி 42 ரன்னில் வெளியேறினார்.



    பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேற இந்தியா 37.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 113 ரன்னில் சுருண்டது. தீப்தி வந்தனா 26 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி சார்பில் டேனியல் ஹசெல், சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 29 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×