search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் - ஸ்டீவன் சுமித்
    X

    தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் - ஸ்டீவன் சுமித்

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார். #BallTampering #Smith #Warner

    சிட்னி:

    பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    இந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என சுமித் தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவத்தை என்றும் மனதில் வைத்திருப்பேன், என் நாட்டிற்காக மிண்டும் விளையாடுவேன். ஆனால் அணியின் கேப்டனாக முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன். அவை ஒரு அழுத்தமான செய்தியை கூற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் கொடுக்கப்பட்டது, நான் அதை ஏற்றுகொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #BallTampering #Smith #Warner #Australia
    Next Story
    ×