search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவிற்கு 612 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா
    X

    ஆஸ்திரேலியாவிற்கு 612 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

    ஜோகன்னஸ்பார்க் டெஸ்டில் டு பிளிசிஸின் அபார சதத்தால் ஆஸ்திரேலியாவிற்கு 612 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #SAvAUS
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 488 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 221 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    267 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 39 ரன்னடனும், டு பிளிசிஸ் 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டு பிளிசிஸ், டீன் எல்கர் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். ஒரு வழியாக டீன் எல்கர் 81 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். டு பிளிசிஸ் 120 ரனகள் குவித்து கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்தது.



    அடுத்து வந்த டி காக் 4 ரன்னில் வெளியேறினாலும், பவுமா (35 அவுட் இல்லை), பிலாண்டர் (33 அவுட் இல்லை) ஆகியோர் தேனீர் இடைவேளை வரை விளையாடினார்கள். அப்போது தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்கில் 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அப்போது ஒட்டுமொத்தமாக தென்ஆப்பிரிக்கா 611 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 612 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. 612 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×