search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமித்தை கேப்டனில் இருந்து தூக்குங்கள் - கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை
    X

    சுமித்தை கேப்டனில் இருந்து தூக்குங்கள் - கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரை

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதால் ஸ்டீவன் சுமித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஆஸ்திரேலிய அரசு பரிந்துரைத்துள்ளது. #SAvAUS #Smith
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. வீரர்கள் அறையில் ஏற்பட்ட மோதல், களத்தில் வாக்குவாதம், ரசிகர்களிடம் ஆஸ்திரேலிய வீரர்கள் மோதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பான்கிராப்ட் பீல்டிங் செய்த போது பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார்.

    நடுவர்கள் இதை கண்காணித்து விசாரித்தனர். அப்போது பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். அதோடு ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டுள்ளார். பந்தின் தன்மையை மாற்றி வெற்றி பெற ஆஸ்திரேலியா அணி கையாண்ட முயற்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சுமித்தின் ஒப்புதலால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒருமைப்பாட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே சுமித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

    ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் கூறும் போது “பந்தை சேதப்படுத்திய விவகாரம் மிகவும் அதிர்ச்சியானது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். இதுகுறித்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளேன்” என்றார். #SAvAUS #CapeTownTest #Bancroft #Smith #CameronBancroft #SteveSmith
    Next Story
    ×