search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்லெட்ஜிங், ஹார்ன் ஒலிப்பான் ஆகியவற்றை நான் விரும்புவதில்லை - ரகானே
    X

    ஸ்லெட்ஜிங், ஹார்ன் ஒலிப்பான் ஆகியவற்றை நான் விரும்புவதில்லை - ரகானே

    கிரிக்கெட் மைதானத்தில் ஸ்லெட்ஜிங், அதேபோல் கார் ஓட்டும்போது ஹார்ன் ஒலிப்பதை விரும்பவில்லை என்று ரகானே கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரகானே. குறிப்பாக வெளிநாட்டு மண்ணிலும், வேகப்பந்து வீச்சு பந்திலும் அபாரமாக விளையாடக்கூடியவர். மும்பையில் மோட்டார் வாகனத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, ஹார்ன் ஒலிக்க வேண்டாம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரகானே கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரகானே கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் மைதானங்களில் ஸ்லெட்ஜிங்கை விரும்புவதில்லை. அதேபோல் டிரைவிங் செய்யும்போது கார் ஹார்ன்-ஐ ஒலிக்க விரும்புவதில்லை.



    ஒலி மாசுபாடு மிகவும் தீவிரமான பிரச்சினை. குறிப்பாக மும்பையை போன்ற மெட்ரோ சிட்டியில் தீவிரமானது. ‘No Honking’ முயற்சியில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. என்னால் எவ்வளவு முடியுமோ அதை செய்வேன்’’ என்றார்.
    Next Story
    ×