search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் முயற்சியால் கொச்சி கால்பந்து மைதானம் காப்பாற்றப்பட்டது
    X

    சச்சின் முயற்சியால் கொச்சி கால்பந்து மைதானம் காப்பாற்றப்பட்டது

    தெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று இந்தியா– வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #SaveKochiTurf
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இதில் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நவம்பர் 1–ந்தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

    கொச்சி மைதானத்தில் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. கொச்சி ஸ்டேடியம் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து மைதானமாக உருவெடுத்து வருகிறது.

    உலகக்கோப்பைக்காக மைதானம் புற்கள் முழுவதும் கால்பந்து போட்டிக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கு கிரிக்கெட் போட்டி நடத்தினால் மைதான புற்கள் வெட்டப்பட்டு கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் என்ற செய்து வெளியானது. இப்படி நடந்தால் கொச்சி மைதானம் கால்பந்திற்குரிய சிறப்பான வடிவத்தை இழந்துவிடும்.



    இதனால் கால்பந்து வீரர்கள் மிகவும் கவலையடைந்தது. கொச்சி கால்பந்து மைதானத்தை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கால்பந்து மைதானத்திற்கு ஆதரவான முயற்சிகளை மேற்கொண்டார். கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    அவரது கோரிக்கையை ஏற்று இந்த போட்டியை திருவனந்தபுரத்துக்கு மாற்ற கேரளா மாநிலம் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. கேரள மாநில விளையாட்டு மந்திரி மொய்தீன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
    Next Story
    ×