search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்- நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்- நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம்

    இங்கிலாந்து அணிகெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் தனது 18-வது சதத்தை பதிவு செய்துள்ளார். #ENGvNZ #williamson
    ஆக்லாந்து:

    நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20.4 ஓவரில் 58 ரன்னில் சுருண்டது. போல்ட் 6 விக்கெட்டும், சவுத்தி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 69 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 91 ரன்னுடனும், நிகோலஸ் 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 64-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18-வது சதம் ஆகும். அவர் 102 ரன்னில் (220 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட் ஆனார்.
    92 ஓவரின் முதல் பந்தை மோயின் அலி வீசிய போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தற்போது வரை நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது.
    Next Story
    ×