search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியாமி ஓபன்- முதல் சுற்றிலேயே செரீனா வில்லியம்ஸ் தோல்வி
    X

    மியாமி ஓபன்- முதல் சுற்றிலேயே செரீனா வில்லியம்ஸ் தோல்வி

    மியாமி ஒபன் டென்னிசில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நவோமி ஒசாகாவிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். #MiamiOpen
    மியாமி ஓபன் டென்னிஸ் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    இதில் செரீனா வில்லியம்ஸ் 3-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார். கடந்த வாரம் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் தொடரில் 3-வது சுற்று வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    20 வயதாகும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா கடந்த வாரம் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் ஓபனை கைப்பற்றியிருந்தார். மற்றொரு முன்னாள் வீராங்கனை விக்டோரியா அஸ்ரென்கா 3-6, 0-6 எனத் தோல்வியடைந்தார்.
    Next Story
    ×