search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்
    X

    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. #SouthAfrica #Australia
    கேப்டவுன்:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கும்.

    2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் மீது இடித்தற்காக 2 போட்டியில் தடை விதிக்கப்பட்ட தென்ஆப்பிரிக்கா வீரர் ரபடாவுக்கு அப்பீலின் போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நாளைய போட்டியில் விளையாடுவார். இதனால் நாளை தொடங்கும் டெஸ்டில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×