search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஸ்ட் ஸ்பின்னர்களை போல் எங்களாலும் அசத்த முடியும் - வாஷிங்டன் சுந்தர்
    X

    ரிஸ்ட் ஸ்பின்னர்களை போல் எங்களாலும் அசத்த முடியும் - வாஷிங்டன் சுந்தர்

    ரிஸ்ட் மற்றும் லெஃப்ட்ஆர்ம் ஸ்பின்னர்களை போல் பிங்கர் ஸ்பின்னர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். #INDvBAN
    இலங்கையில் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா - வங்காள தேச அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

    இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் இளம் ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்து வீசினார். குறிப்பாக பவர்-பிளே ஓவரில் சிறப்பாக பந்து வீசினார். ஐந்து போட்டிகளில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஓவருக்கு சராசரியாக 5.70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தொடர் நாயகன விருதை தட்டிச்சென்றார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ரிஸ்ட் ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் அபாரமாக விளையாடி வருகிறார்கள். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்ற இவர்களின் பணி முக்கியமானதாக இருந்தது. இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ரிஸ்ட் மற்றும் லெஃப்ட்ஆர்ம் ஸ்பின்னர்கள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களோ, அதே தாக்கத்தை ஆஃப் ஸ்பின்னர்களாலும் (Finger Spinner) ஏற்படுத்த முடியும் என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘இந்திய மண்ணில் இலங்கை தொடரில் விளையாடிய பின்னர், மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். எல்லா வகையான சவாலுக்கும் நான் மனதளவில் தயார். ஆனால், தொடர் நாயகன் விருதை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினேன். இதை அப்படியே முன்னோக்கி எடுத்துக் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.



    ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மேஜிக்கல். அவர்களை போன்று ஃபிங்கர் ஸ்பின்னர்களான ஆஃப் ஸ்பின்னர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். பெரும்பாலான அணிகள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் லெஃப்ஆர்ம் அல்லது லெக் ஸ்பின்னர்களைதான் விரும்புகின்றன. ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஆஃப் ஸ்பின்னர்கள் நன்றாக பயிற்சி எடுப்பது அவசியம்’’ என்றார்.
    Next Story
    ×