search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போர்ச்சுக்கலின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் ரொனால்டோ
    X

    போர்ச்சுக்கலின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார் ரொனால்டோ

    போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து 3-வது முறையாக பெற்றுக் கொண்டார். #CR7
    போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். 2017-ம் ஆண்டு ரொனால்டோவிற்க சிறப்பான ஆண்டாக அமைந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் லா லிகா, சாம்பியன்ஸ் லீக, கிளப் உலகக்கோப்பையை வென்றது.

    மெஸ்சியை வீழ்த்தி தலைசிறந்த விருதான பலோன் டி'ஆர் விருதை வென்றார். இந்நிலையில் போர்ச்சுக்கல் 2017-ம் வருடத்திற்கான சிறந்த வீரராக ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    இதற்கான வாக்கெடுப்பில் ரொனால்டோ 65 சதவீதம் வாக்குகள் பெற்றார். ஸ்போர்ட்டிங் அணிக்காக விளையாடும் கோல்கீப்பர் ருய் பேட்ரிசியோ 18 சதவித வாக்குகளும், மான்செஸ்டர் சிட்டி வீரர் பெர்னாடோ சில்வா 17 சதவித வாக்குகளும் பெற்றனர்.

    இந்த விருத கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் வழங்கப்பட்டு வருகிறார். மூன்றையும் ரொனால்டோதான் வென்றுள்ளார்.
    Next Story
    ×