search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபாடாவின் அப்பீல் வெற்றி- கேப்டவுன் டெஸ்டில் விளையாடுகிறார்
    X

    ரபாடாவின் அப்பீல் வெற்றி- கேப்டவுன் டெஸ்டில் விளையாடுகிறார்

    ஐசிசி தடை விதித்ததை எதிர்த்து அப்பீல் செய்த மனுவில் ரபாடா வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாடுகிறார். #SAvAUS #Rabada
    கேப்வுடன்:

    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ரபாடா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் அவரின் தோள்பட்டையை இடித்தவாறு சென்றார். இதைத்தொடர்ந்து ரபாடாவிற்கு, ஐசிசி விதிமுறை லெவல்-2ன்படி 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து புள்ளிகள் இருப்பதால் இரண்டு டெஸ்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

    இந்த தடையை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். நியூசிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹெரான் என்ற நிதி கமி‌ஷனர் இதுகுறித்து நேற்று விசாரணையை தொடங்கினார். ரபாடா சுமார் 6 மணி நேரம் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

    இந்த விசாரணை முடிவில் ரபாடாவின் குற்றம், லெவல் 2-ன் கீழ் வராது. லெவல் 1-ன் கீழ் வரும் என விசாரணையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் டிமெரிட் புள்ளி 3-ல் இருந்து 1-ஆக குறைக்கப்பட்டது. இதனால் 7 புள்ளிகள் பெற்றிருப்பதால் 3-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்பட்டார். #SAvAUS #Rabada
    Next Story
    ×