search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகாவில் தோல்வியை சந்திக்காமல் 11 புள்ளிகள் முன்னிலையுடன் பார்சிலோனா
    X

    லா லிகாவில் தோல்வியை சந்திக்காமல் 11 புள்ளிகள் முன்னிலையுடன் பார்சிலோனா

    லா லிகா கால்பந்தில் தோல்வியை சந்திக்காமல் 11 புள்ளிகள் முன்னிலையுடன் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது பார்சிலோனா. #LaLiga #Barca #messi
    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஐரோப்பியாவில் நடைபெறும் கிளப் அணிகளுக்கு இடையிலான முக்கிய கால்பந்து லீக்கில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இந்நிலையில் நேற்றி நள்ளிரவு பார்சிலோனா அத்லெடிக் கிளப் அணியை எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 2-0 என வெற்றி வாகை சூடியது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் அல்காசர் முதல் கோலையும், 20-வது நிமிடத்தில் மெஸ்சி 2-வது கோலையும் பதிவு செய்தனர். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனை நீண்டு கொண்டே செல்கிறது.



    லா லிகா தரவரிசையில் பார்சிலோனா 29 போட்டிகள் முடிவில் 23 வெற்றி, 6 டிராவுடன் 75 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறது. அட்லெடிகோ டி மாட்ரிட் 19 வெற்றி, 7 டிரா, 3 தோல்விகளுடன் 64 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரியல் மாட்ரிட் 18 வெற்றி, 6 டிரா, 5 தோல்விகளுடன் 60 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளது. #LaLiga #Barca #messi
    Next Story
    ×