search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து
    X

    உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஸ்காட்லாந்தை வென்றது அயர்லாந்து

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து-ஸ்காட்லாந்து அணிகள் நேற்று மோதின. இதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
    ஹராரே:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரேவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் அயர்லாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 9 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. ஆன்டி பால்பிர்னி (105 ரன்) சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து அணி 47.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி, இறுதிப்போட்டி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

    சூப்பர் சிக்ஸ் சுற்றில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. 
    Next Story
    ×