search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு நாட்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து இரானி கோப்பையை தட்டிச் சென்றது விதர்பா
    X

    நான்கு நாட்கள் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து இரானி கோப்பையை தட்டிச் சென்றது விதர்பா

    நான்கு மிகப்பெரிய சதங்களுடன் டிராவில் முடிந்த இரானி கோப்பை போட்டியில், முதல் இன்னிங்சில் முன்னிலைப் பெற்றதால் விதர்பா கோப்பையை கைப்பற்றியது. #IraniCup
    ரஞ்சி டிராபி சாம்பியனான விதர்பாவிற்கும் ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கும் இடையில் இரானிக் கோப்பை போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்கள் போட்டியான டெஸ்ட் ஆட்டம் கடந்த 14-ந்தேதி நாக்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற வித்ரபா அணி கேப்டன் பாசல் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பாசல் 89 ரன்களும், சஞ்சய் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த வாசிம் ஜாபர் 286 ரன்களும், கணேஷ் சதிஷ் 120 ரன்களும், வான்கடே அவுட்டாகாமல் 157 ரன்களும் குவித்தனர். 3-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. விதர்பா அணி நான்கு நாட்கள் வரை ஆடி முதல் இன்னிங்சை விளையாடியது. 7 விக்கெட் இழப்பிற்கு 800 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. விதர்பா வேகப்பந்து வீச்சாளர் குர்பானியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சமர்த் (0), மயாங்க் அகர்வால் (11), கருண் நாயர் (21), பரத் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஹனுமா விஹாரி, ஜயந்த் யாதவ் ஆகியோர் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இவர்கள் ஆட்டத்தால் நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. விஹாரி 81 ரன்னுடனும், ஜயந்த் யாதவ் 62 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜயந்த் ஜாதவ் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். விஹாரி சதம் அடித்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரின் ஆட்டத்தால் ரெஸ்ட் ஆப் இந்தியா 390 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    410 ரன்கள் முன்னிலைப் பெற்ற விதர்பா பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. சஞ்சய், வாத்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விதர்பா விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்திருக்கும்போது அத்துடன் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. வாத்கர் 50 ரன்கள் அடித்தார்.

    முதல் இன்னிங்ஸில் விதர்பா முன்னிலைப் பெற்றிருந்ததால், இரானி கோப்பையை விதர்பா வெற்றி பெற்றது. #IraniCup
    Next Story
    ×