search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்து விடுமோ?- அஞ்சுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்
    X

    டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்து விடுமோ?- அஞ்சுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

    இளம் வீரர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்களை விரும்புவதால் டெஸ்ட் போட்டி குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கவலை தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் போட்டியில்தான் ஒரு கிரிக்கெட் வீரரின் உண்மையான திறமையை கண்டறிய முடியும். நவீன காலத்தில் அப்படிபட்ட டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் குறைந்து கொண்டே வருகிறது.

    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குதான் முக்கியத்தும் கொடுப்பார்கள். இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக இங்கிலாந்தின் அடில் ரஷித், அலெக்ஸ் ஹேல்ஸ், ரீஸ் டாப்லே ஆகியோர் கவுண்டி சாம்பியன்ஷிப் 2018 தொடரை புறக்கணித்து லிமிடெட் ஓவர் போட்டியில் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இப்படியே வீரர்கள் சென்றால் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்து விடும் என டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழத்திய இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கவலை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இன்னும் டெஸ்ட் போட்டியின் மீது விருப்பம் இருப்பதற்காக நான் பிரார்த்திக்கிறேன். தற்போது கிரிக்கெட் சென்று கொண்டிருக்கின்ற நிலையிலும், சர்வதேச அளவில் அதிகமான டி20 கிரிக்கெட் தொடர்கள் தோன்றி கொண்டிருக்கையில் டெஸ்ட் போட்டிக்கான கவலை ஏற்படுகிறது.

    குறுகிய வகை கிரிக்கெட்டில் நீண்ட நேரம் பீல்டிங் செய்ய வேண்டியதில்லை. இதனால் உடலுக்கு எளிதாக உள்ளது. மனநிலையும் சிறப்பாக உள்ளது. அதிக அளவில் வசதி மற்றும் பணம் கிடைப்பதால் உலகம் முழுவதும் உருவாக்க முடியும்’’ என்றார்.
    Next Story
    ×