search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனை: இந்திய அணிக்கு ஊக்கத்தொகை கிடையாது
    X

    தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனை: இந்திய அணிக்கு ஊக்கத்தொகை கிடையாது

    முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு ஊக்கத்தொகை கிடையாது என கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூறியுள்ளது. #SAvIND #INDvSA
    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக ஒரு நாள் போட்டி தொடரை (5-1) வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன்பு நான்கு முறை சுற்றுப்பயணம் செய்தும் வெல்ல முடியவில்லை.

    1992-ம் ஆண்டு 2-5 என்ற கணக்கிலும், 2006-ல் 0-4 என்ற கணக்கிலும், 2011-ல் 2-3 என்ற கணக்கிலும் 2013-ல் 0-2 என்ற கணக்கிலும் தொடரை இழந்தது. முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்தன.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் தலைவர் சி.கே.கன்னா, கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஆனால் அவரது கோரிக்கை நிர்வாகக்குழுவால் நிராகரிக்கப்பட்டது.

    இதுகுறித்து நிர்வாக குழு கூறுகையில், இரு நாட்டு தொடர் போட்டிகளில் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டிகளில் வெல்லும் போது மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×