search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரியா தொடர்- பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமனம்
    X

    கொரியா தொடர்- பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமனம்

    கொரியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீராங்கனைகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. #HI
    இந்திய பெண்கள் ஹாக்கி அணி அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கொரியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூணம் ராணி மீண்டும் அணியில் இணைந்துள்ளார். சுனிதா லக்ரா துணைக் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    கோல்கீப்பர் சவிதாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ராஜானி எதிமார்ப்பு சேர்க்கப்பட்டுள்ளார்.

    அணியின் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

    கோல் கீப்பர்கள்:- 1. ராஜானி எதிமார்ப்பு, 2. ஸ்வாதி

    தடுப்பாட்ட வீராங்கனைகள்: 3. தீபிகா, 4. சுனிதா லக்ரா (துணைக்கேப்டன்), 5. தீப் கிரேஸ் எக்கா, 6. சுமன் தேவி தவுடம், 7. குஜ்ரித் கவுர், 8. சுஷிலா சானு, 9. புக்ராம்பம்

    நடுகள வீராங்கனைகள்: 10. மோனிகா, 11. நமிதா டோப்போ, 12. நிக்கி பிரதான், 13. நேஹா கோயல், 14. லிலிமா மின்ஸ், 15. உதிதா

    முன்கள வீராங்கனை:-

    16. ராணி ராம்பால் (கேப்டன்), 17. வந்தனா கட்டாரியா, 18, லால்ரெமசியாமி, 19. நவ்ஜோத் கவுர், 20. நவ்நீத் கவுர், 21. பூணம் ராணி.
    Next Story
    ×