search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் விளையாடும் நம்பிக்கையில் கிறிஸ் லின்
    X

    ஐபிஎல் தொடரில் விளையாடும் நம்பிக்கையில் கிறிஸ் லின்

    தோள்பட்டை காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை என டாக்டர்கள் கூறியதால், ஐபிஎல் தொடரில் விளையாடும் நம்பிக்கையில் கிறிஸ் லின் உள்ளார். #IPL2018 #KKR
    ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின். 27 வயதாகும் இவர் தனது ஆதிரடி ஆட்டத்தால் பந்து வீச்சாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். ஆனால் அடிக்கடி காயம் அவரை அச்சுறுத்தி வருவதால் தொடர்ச்சியாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார்.

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21-ந்தேதி) ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கிறிஸ் லின் பேட்டிங் செய்யவில்லை.

    நேற்று பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் இருந்து கிறிஸ் லின் விலகியுள்ளார். காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை இருந்தது.

    இந்நிலையில் கிறிஸ் லின் தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காயத்தில் இருந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    ஐபிஎல் தொட்ரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. மேலும், கேகேஆர் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் 9.5 கோடி ரூபாய் அவருக்கு கிடைக்காது. கொல்கத்தா அணியில் சேர்ந்த பிறகு, ஒரு போட்டியில் கூட விளையாடாமல் விலகினால் பாதி பணம் கிடைக்கும். ஐபிஎல் போட்டியில் விளையாடினால் முழுத் தொகையையும் பெறுவார்.

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் லின் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் 180 ஆகும்.
    Next Story
    ×