search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் தொடரை வெல்வது யார்? இந்தியா- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்
    X

    20 ஓவர் தொடரை வெல்வது யார்? இந்தியா- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

    தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேப்டவுனில் நடக்கிறது. #t20cricket #indiavssouthafrica #viratkohli

    கேப்டவுன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடி 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது.

    தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேப்டவுனில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ஷிகர் தவான், கோலி, மனீஷ் பாண்டே, டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், ஜெய்தேவ் உனட்கட், பும்ரா, பாண்ட்யா, சாஹல் ஆகியோர் உள்ளனர்.

    கடந்த போட்டியில் சாஹல் பந்து வீச்சை தென்ஆப்பிரிக்க வீரர்கள் நொறுக்கி விட்டனர். அவர் 4 ஓவரில் 64 ரன் விட்டு கொடுத்தார்.

    இதனால் சாஹல் சிறப்பாக பந்து வீசுவது அவசியமாகும். ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா இருக்கிறது.

    20 ஓவர் போட்டி தொடரை வென்றால் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு திருப்திகரமானதாக அமையும்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் ஹென்டிரிக்ஸ், சுமட்ஸ், டுமினி, கிளாசென், டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் உள்ளனர். குறிப்பாக விக்கெட் கீப்பர் கிளாசென் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    பந்து வீச்சில் கிறிஸ்மோரிஸ், டாலா, பேட்டக்சன் ஆகியோர் உள்ளனர். 2-வது போட்டியில் 189 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் தென் ஆப்பிரிக்கா நம்பிக்கையுடன் உள்ளது. அதே உத்வேகத்தில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய போட்டி விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #t20cricket #indiavssouthafrica #viratkohli

    Next Story
    ×