search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது மும்பை எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது மும்பை எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை எப்.சி. அணி 3-2 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. #ISL #MumbaiFC #NorthUnitedFC
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை எப்.சி. அணி 3-2 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.



    இந்தப் போட்டியில் மும்பை அணி சார்பில் அர்ச்சிலி எமானா 15-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் லூசியன் கோலன் 24-வது நிமிடத்திலும், சாம்பின்ஹா 43-வது நிமிடத்திலும் ஒரு கோலடித்தனர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மும்பை அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் சார்பில் சாண்டொஸ் 54-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மேலும், லூசியன் கோலன் ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மும்பை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதையடுத்து, இந்த போட்டியில் மும்பை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, மும்பை எப் சி அணி 7 வெற்றி, 2 டிரா, 7 தோல்வியுடன் 23 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 11 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.  #ISL #MumbaiFC #NorthUnitedFC #tamilnews
    Next Story
    ×