search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் 103 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி
    X

    விஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் 103 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. #VijayHazare #HYDvKAR #MUMvMAH
    புதுடெல்லி:

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. #VijayHazare #HYDvKAR #MUMvMAH

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் முடிவில் பரோடா, கர்நாடகா (ஏ பிரிவு), மராட்டியம், டெல்லி (பி பிரிவு), ஆந்திரா, மும்பை (சி பிரிவு), ஐதராபாத், சவுராஷ்டிரா (டி பிரிவு) ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 3 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டம் நேற்று தொடங்கியது.

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினார்கள்.

    முதல் விக்கெட் 29 ரன்களில் விழுந்தது. பின்னர் களமிங்கிய ரவிகுமார் சமர்த், அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களது விக்கெட்டுகளை எடுக்க ஐதராபாத் அணி பவுலர்கள் கடுமையாக போராடினார். கர்நாடகா அணி 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

    இதற்கிடையே, அகல்வால் மற்றும் ரவிகுமார் இருவரும் சதம் விளாசினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக துவக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வால் 140 ரன்களும், ரவிகுமார் சமர்த் 125 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஐதராபாத் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவி கிரண் 2, ரவி தேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    ஐதராபாத் அணி 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ராயுடுவும், அக்‌ஷ்த் ரெட்டியும் களமிறங்கினர்.

    ஆனால் கர்நாடக அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் ஐதராபாத் அணியினர் திணறினர். ஐதராபாத் அணியில் அம்பதி ராயுடு 64 ரன்களும், ரவி தேஜா 53 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சந்தீப் 42 ரன்களில் அவுட்டானார்.  
     
    இறுதியில், ஐதராபாத் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து, கர்நாடக அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடக அணி சார்பில் ஷ்ரேயஸ் கோபால் 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டும் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதேபோல, மற்றொரு போட்டியில் மராட்டிய அணியும், மும்பை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் அரை சதமடிக்க 50 ஓவரில் 222 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மராட்டிய அணியில் ஸ்ரீகாந்த் முண்டே, ஷவுகத் ஷேக் ஆகியோர் அரை சதம்டித்தனர். இறுதியில், மராட்டிய அணி 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. #VijayHazare #VijayHazareTrophy #VijayHazareTrophy2018 #HYDvKAR #MUMvMAH
    Next Story
    ×