search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் கர்நாடகா 347 ரன்கள் குவிப்பு
    X

    விஜய் ஹசாரே கிரிக்கெட் - அகர்வால், ரவிகுமார் சதத்தால் கர்நாடகா 347 ரன்கள் குவிப்பு

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 347 ரன்கள் குவித்துள்ளது. #VijayHazare #HYDvKAR #MUMvMAH
    புதுடெல்லி:

    விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வால், ரவிகுமார் சமர்த் இருவரது சதத்தால் கர்நாடகா அணி 347 ரன்கள் குவித்துள்ளது.

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் முடிவில் பரோடா, கர்நாடகா (ஏ பிரிவு), மராட்டியம், டெல்லி (பி பிரிவு), ஆந்திரா, மும்பை (சி பிரிவு), ஐதராபாத், சவுராஷ்டிரா (டி பிரிவு) ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. 3 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோர் களமிறங்கினார்கள்.

    முதல் விட்கெட் 29 ரன்களில் விழுந்தது. பின்னர் களமிங்கிய ரவிகுமார் சமர்த், அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இவர்களது விக்கெட்டுகளை எடுக்க ஐதராபாத் அணி பவுலர்கள் கடுமையாக போராடினார். கர்நாடகா அணி 271 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டை கைப்பற்றினார்கள்.



    இதற்கிடையே, அகல்வால் மற்றும் ரவிகுமார் இருவரும் சதம் விளாசினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக துவக்க ஆட்டகாரர் மயங்க் அகர்வால் 140 ரன்களும், ரவிகுமார் சமர்த் 125 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    ஐதராபாத் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவி கிரண் 2, ரவி தேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    ஐதராபாத் அணி 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதேபோல, மற்றொரு போட்டியான, மராட்டிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 222 ரன்கள் எடுத்துள்ளது. #VijayHazare #VijayHazareTrophy #VijayHazareTrophy2018 #HYDvKAR #MUMvMAH
    Next Story
    ×