search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிராட்மேன் சாதனையை கோலி முறியடிப்பாரா?- இன்று 2-வது 20 ஓவர் கிரிக்கெட்
    X

    பிராட்மேன் சாதனையை கோலி முறியடிப்பாரா?- இன்று 2-வது 20 ஓவர் கிரிக்கெட்

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் பிராட்மேன் சாதனையை கோலி முறியடிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது. #SAvIND #ViratKohli #Bradman
    செஞ்சூரியன்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

    இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியிலும் வென்று 20 ஓவர் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

    20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க தென் ஆப்பிரிக்காவுக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

    இந்திய அணி கேப்டன் வீராட்கோலி மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் புதிய சாதனை படைப்பாரா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்கா பயணத்தில் அவர் இதுவரை 13 இன்னிங்சில் 870 ரன் குவித்துள்ளார். 3 டெஸ்டில் 286 ரன்னும் (6 இன்னிங்ஸ்), 6 ஒருநாள் போட்டியில் 558 ரன்னும், முதல் 20 ஓவர் போட்டியில் 26 ரன்னும் எடுத்தார். அவர் டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) சாதனையை முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிராட்மேன் சாதனையை முறியடிக்க 104 ரன்னும், ரிச்சட்ர்ஸ் சாதனையை முறியடிக்க 175 ரன்னும் கோலிக்கு தேவை. பிராட்மேன் 1930-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது 5 டெஸ்டில் 974 ரன் குவித்தார். ஒரு சுற்றுப்பயணத்தில் எடுக்கப்பட்ட 2-வது அதிக ரன் இதுவாகும். விவியன் ரிச்சர்ட்ஸ் 1976-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது 1045 ரன் குவித்து (4 டெஸ்டில் 829 ரன் + 3 ஒருநாள் போட்டியில் 216) வரலாறு படைத்தார்.

    தென்ஆப்பிரிக்கா பயணத்தின் கோலிக்கு இன்னும் 2 ஆட்டங்களே இருக்கிறது. இதனால் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிப்பது என்பது மிகவும் கடினமே. பிராட்மேன் சாதனையை முறியடிக்க 104 ரன்களே தேவைப்படுகிறது.

    இதனால் அவரது சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆட்டத்தில் அவர் 104 ரன்களை எடுக்க வேண்டும். இரண்டு போட்டியில் 130 ரன்கள் எடுத்தால் அவர் 1000 ரன்களை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    இன்றைய ஆட்டத்தில் கோலி மேலும் ஒரு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அவர் 18 ரன்னை எடுத்தால் 2 ஆயிரம் ரன்னை தொடுவார். இந்த ரன்னை எடுக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார். 29 வயதான கோலி 50 ஆட்டத்தில் விளையாடி 1982 ரன் எடுத்துள்ளார்.

    சர்வதேச அளவில் குப்தில், மேக்குல்லம் ஆகியோர் மட்டுமே 2 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த ரன்னை எடுக்கும் 3-வது வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.
    Next Story
    ×