search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் கெவின் ஆண்டர்சன்
    X

    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் கெவின் ஆண்டர்சன்

    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாம் குரேவை வீழ்த்தி, தென்ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #KevinAnderson #NewYorkOpen
    நியூயார்க்:

    நியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தென்ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவின் சாம் குரேவை எதிர்கொண்டார்.

    இப்போட்டியின் முதல் செட்டை 6-4 என சாம் குரே கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 6-3 என கெவின் ஆண்டர்சன் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் இருவரும் சிறப்பாக விளையடினர். இந்த செட்டை 7-6 (7-1) என கெவின் ஆண்டர்சன் கைப்பற்றினார்.  இறுதியில் 4-6, 6-3, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற கெவின் ஆண்டர்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் கெவின் ஆண்டர்சன் உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறினார்.



    ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் மேக்ஸ் மிர்னியி (பெலாரஸ்) - பிலிப் ஆஸ்வால்ட் (ஆஸ்திரியா) ஜோடி, ஆர்டம் சிடெக் (நியூசிலாந்து) - வீஸ்லி கூல்ஹாப் (நெதர்லாந்து) ஜோடியை 6-4, 4-6, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #KevinAnderson #NewYorkOpen
    Next Story
    ×