search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுன்சர் சவாலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்- ஸ்மித்
    X

    பவுன்சர் சவாலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்- ஸ்மித்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் ஷார்ட் பிட்ச் பவுன்சர் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார். #SAvAUS
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என வெற்றி பெற்றது. மூன்று ஆடுகளங்களிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அமர்க்களம் படுத்தினார்கள். பவுன்ஸ், வேகம், ஸ்விங் என ஆடுகளம் அதிக அளவில் அவர்களுக்கு ஒத்துழைத்தது.

    ஆஸ்திரேலியா சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 4-0 என வீழ்த்தியது. அந்த அணியில் உள்ள மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் இங்கிலாந்தின் கடைநிலை பேட்ஸ்மேன்களை ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தால் அச்சுறுத்தி விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

    ஆஷஸ் தொடர் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தற்போது முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது.



    இந்த தொடர் நாளை மறுநாள் முடிவடைகிறது. அதன்பின் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கு முன் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    பயிற்சி ஆட்டம் பிப்ரவரி 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் மார்ச் 1-ந்தேதி டர்பனில் முதல் டெஸ்ட் தொடங்கியது. 2-வது டெஸ்ட் மார்ச் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை போர்ட் எலிசபெத்திலும், 3-வது டெஸ்ட் மார்ச் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கேப் டவுனிலும், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 30-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

    இந்தியாவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சால் அச்சுறுத்திய தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் வேகப்பந்து வீச்சை முக்கிய துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேவேளையில் இங்கிலாந்தை எப்படி அச்சுறுத்தினமோ, அதேபோல் தென்ஆப்பிரிக்காவையில் அச்சுறுத்துவோம். தென்ஆப்பரிக்காவிற்கு எதிரான வேகப்பந்து வீச்சு சவாலை எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன் என ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளில் இருந்தும் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சு இருக்கும். இருஅணியின் முன்னணி பேட்ஸ்மேன்களும், கடைநிலை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



    இது சிறப்பானது என்று நான் நினைக்கிறேன். இந்த சவாலால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட நீங்கள் விரும்புவீர்கள்.

    பேட்ஸ்மேன்கள் நிச்சயமாக இந்த தொடரை எதிர்பார்த்து கொண்டிருக்க வேண்டும். ரசிகர்கள் போட்டியை ரசிக்கும் வகையில் சிறந்த தொடராக இருக்கும். தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலை போன்றே இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×