search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலவரமாக மாறிய கால்பந்து போட்டியில் 9 பேருக்கு ரெட் கார்டு- போட்டி கைவிடல்
    X

    கலவரமாக மாறிய கால்பந்து போட்டியில் 9 பேருக்கு ரெட் கார்டு- போட்டி கைவிடல்

    பிரேசில் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் ஆட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது.
    பிரேசிலில் நடைபெற்ற மாநில சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் விடோரியா - பகியா அணிகள் மோதின. விடோரியாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 33-வது நிமிடத்தில் விடோரியா முதல் கோலை பதிவு செய்தது.

    பின்னர் 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் நான்காவது நிமிடத்தில் பகியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணியின் வினிசியஸ் கோல் அடித்தார். அத்துடன் விடோரியா ரசிகர்கள் முன் சென்று ஆத்திரமூட்டும் வகையில் வினிசியஸ் டான்ஸ் ஆடினார்.



    இதனால் கோபம் அடைந்த விடோரியா அணி கோல்கீப்பர் வினிசியஸை தாக்கினார். அவருடன் சில வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பகியா அணி வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் போட்டி வன்முறையாக மாறியது. இந்த வன்முறை காரணமாக பகியா அணியின் 3 வீரர்களும், விடோரியா அணியின் 3 வீரர்களும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.

    ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அணிகளில் இருந்து மேலும் தலா ஒரு வீரர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர். ஆட்டம் முடிவடைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன் விடோரியாவின் பிஸ்போ என்ற வீரர் இரண்டு மஞ்சள் அட்டை மூலம் வெளியேற்றப்பட்டார்.



    இதனால் 9 வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெறியேற்றப்பட்டனர். விடோரியா அணியில் 5 வீரர்கள் வெளியேற்றப்பட்டதால், 6 வீரர்களே இருந்தனர். 6 வீரர்கள் மூலம் போட்டியை நடத்த இயலாது என்பதால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டது.

    இதுகுறித்து பிரேசில் ஸ்போர்ட்டிங் கோர்ட் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×