search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் வெற்றி
    X

    லா லிகா தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகள் வெற்றி

    லா லிகா தொடரில் இந்த வாரப் போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ டி மாட்ரிக் அணிகள் வெற்றி பெற்றன. #Laliga #Realmadrid #Barcelona
    ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கு இடையில் நடைபெற்று வரும் லா லிகா தொடரின் இந்த வாரப் போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் களம் இறங்கினத. ஒரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 8 கோல்கள் அடிக்கப்பட்டன. சொந்த மைதானத்தில் ரியல் பெட்டின் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 கோல்கள் அடித்தது. இருந்தாலும் ரியல் மாட்ரிட் 5 கோல்கள் அடித்தது.

    நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மார்கோ அசென்சியோ 11-வது மற்றும் 59-வது நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தார். செர்ஜியோ ரமோஸ் 50-வது நிமிடத்திலும், பென்சிமா 92-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



    மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ டி மாட்ரிட் - அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. இதில் அட்லெடிகோ டி மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது. டியேகோ கோஸ்டா 80-வது நிமிடத்திலும், கேமிய்ரோ 67-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் ரியல் சோசியேடாட் - லெவன்டே அணிகள் மோதின. இதில் 3-0 என ரியல் சோசியேடாட் என வெற்றி பெற்றது.

    மலாகா சிஎஃப் - வாலென்சியா இடையிலான ஆட்டத்தில்  2-1 என வாலென்சியாக வெற்றி பெற்றது. டெபோர்ட்டிவோ அணியை 1-0  என அலெவ்ஸ், எய்பரை 2-0 என பார்சிலோனா, லாஸ் பல்மாஸ் அணியை 2-1 என செவியாவும், ஜிரோனாவை 3-0 என லெகேன்ஸ் அணியும் வெற்றி பெற்றது. #Laliga #Realmadrid #Barcelona
    Next Story
    ×