search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில அளவிலான ஹாக்கி: மத்திய கலால் வரி அணி சாம்பியன்
    X

    மாநில அளவிலான ஹாக்கி: மத்திய கலால் வரி அணி சாம்பியன்

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மத்திய கலால் வரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    சென்னை:

    செயின்ட் பால்ஸ் மனமகிழ் மன்றம் சார்பில் ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. நேற்று நடந்த கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் ஐ.ஓ.பி. 2-2 என்ற கணக்கில் தெற்கு ரெயில்வேயை ‘டிரா’ செய்தது.

    மத்திய கலால் வரி- ஐ.சி.எப். அணிகள் மோதிய ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. போட்டியின் முடிவில் மத்திய கலால் வரி முதல் இடம் பிடித்து சாமபியன் பட்டம் பெற்றது. அந்த அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

    ஐ.சி.எப், ஐ.ஓ.பி, தெற்கு ரெயில்வே ஆகிய அணிகள் முறையே 2 முதல் 4-வது இடங்களை பிடித்தன. #tamilnews
    Next Story
    ×