search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
    X

    குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி

    ரஷ்ய கர்லிங் வீரர் அலெக்சாண்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டதால் அவர் பெற்ற வெண்கலப்பதக்கம் பறிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #WinterOlympics
    பியாங்சாங்:

    தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சூச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் உள்பட சமீபத்திய தடகள போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு அவர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இதனால் ரஷிய அணியினருக்கு இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 168 ரஷிய வீரர்-வீராங்கனைகள் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பல வீரர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ரஷ்யாவின் கர்லிங் வீரரான அலெக்சாண்டர் குரூஷெல்னிட்ச்கி அவரது மனைவி அனஸ்டசியா பிரைசக்லோவா உடன் இணைந்து கடந்த வாரம் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், அலெக்சாண்டர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. அவர் உடலில் மெல்டோனியம் என்ற ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மாரடைப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்து 2016-ம் ஆண்டில் வீரர்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு மேலும் ஒரு சோதனை நடத்தப்பட உள்ளது. அதில் தோல்வியடைந்தால் அலெக்சாண்டர் மற்றும் அவரது மனைவி பெற்ற வெண்கலப்பதக்கங்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. #tamilnews #WinterOlympics

    Next Story
    ×