search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏஃப்ஏ கோப்பை கால்பந்து- காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, சவுதாம்ப்டன்
    X

    ஏஃப்ஏ கோப்பை கால்பந்து- காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, சவுதாம்ப்டன்

    இங்கிலாந்து கிளப் அணிகளுக்கு இடையிலான எஃப்ஏ கோப்பைக்கான காலிறுதி போட்டிக்கு மான்செஸ்டர் யுனைடெட், செல்சி, சவுதாம்ப்டன் அணிகள் தகுதி பெற்றுள்ளன. #FACup #MUN
    இங்கிலாந்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர்களில் எஃப்ஏ கோப்பைக்கான தொடரும் ஒன்று. இந்த தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஐந்து போட்டிகள் நேற்றிரவு நடைபெற்றது.

    இதன் ஒரு போட்டியில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் ஹட்டர்ஸ்பீல்டு அணியை எதிர்கொண்டது இதில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி பெற்றது. இரண்டு கோல்களையும் அந்த அணியின் முன்னணி வீரரான ரொமேலு லூகாகு அடித்தார்.

    மற்றொரு போட்டியில் லெய்செஷ்டர் சிட்டி செஃப்பீல்டு யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இதில் லெய்செஷ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெமி வார்டி 66-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    3-வது ஆட்டத்தில் செல்சி ஹல் சிட்டி அணியை எதிர்கொண்டது. இதில் செல்சி 4-0 என வெற்றி பெற்றது. அந்த அணியின் வில்லியன் இரண்டு கோல்களும், பெட்ரோ, ஆலிவியர் ஜிரார்டு தலா ஒரு கோலும் அடித்தனர்.



    4-வது ஆட்டத்தில் சவுதாம்ப்டன் - வெஸ்ட் ப்ரூம் அணிகள் மோதின. இதில் சவுதாம்ப்டன் 2-1 என வெற்றி பெற்றது. 5-வது ஆட்டத்தில் பிரைட்டன் - கவென்ட்ரி அணிகள் மோதின. இதில் பிரைட்டன் 3-1 என வெற்றி பெற்றது. 6-வதாக நடைபெற்ற ஷெஃப் வெட்னெஸ்டே - ஸ்வான்சி சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெ்ட் பிரைட்டன் அணியையும், செல்சி லெய்செஸ்டர் சிட் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது. #FACup #MUFC #Chelsea
    Next Story
    ×