search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    80 ரன்கள் அடித்த மோர்கன் பந்தை சிக்சருக்கு தூக்கிய காட்சி
    X
    80 ரன்கள் அடித்த மோர்கன் பந்தை சிக்சருக்கு தூக்கிய காட்சி

    இங்கிலாந்து 194 ரன்கள் குவிப்பு: நியூசிலாந்து பைனலுக்கு முன்னேற 175 ரன்கள் இலக்கு

    முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக்கில் இங்கிலாந்து 194 ரன்கள் குவித்துள்ளது. 175 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு முன்னேற முடியும் நிலையில் நியூசிலாந்து உள்ளது. #NZvENG
    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இங்கிலாந்து மூன்று போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

    இந்நிலையில் கடைசி லீக் ஆட்டம் ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இதில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணிக்கு வாய்ப்பு அதிகம் என்பதில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கின.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 21 ரன்னிலும், ஹேல்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.


    36 பந்தில் 53 ரன்கள் குவித்த தாவித் மலன்

    அதன்பின் வந்த தாவித் மலன் 36 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 53 ரன்கள் குவித்தார். மறுமுனையில் மோர்கன் சிறப்பாக விளையாடினார். ஆனால் மற்ற வீர்ரகள் சொதப்ப, மோர்கன் கடைசி வரை நின்று 46 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 80 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்துள்ளது.

    ஜோஸ் பட்லர் (2), பில்லிங்ஸ் (6), வில்லே (10), டாசன் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 4 ஓவரில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.


    3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய டிரென்ட் போல்ட்

    இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்யும். நியூசிலாந்து தோற்றாலும் இரு அணிகளும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கும். இதனால் ரன்ரேட் அடிப்படையில் 175 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம் என நியூசிலாந்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×