search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணி, நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை 1-0 என வீழ்த்தியது. #HeroISL #KeralaBlastersFC #NorthEastUnitedFC

    கவுஹாத்தி:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கவுஹாத்தியில் 8 மணிக்கு தொடங்கிய 75-வது லீக் ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. 

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் கேரளா அணியின் வெஸ் பிரவுன் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்ட முடிவில் கேரளா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் இரு அணியினரும் மாறி மாறி கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.



    இன்றைய போட்டியின் முடிவில் கேரளா அணி 24 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், நார்த்ஈஸ்ட் யூனைடெட் அணி 11 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் நீடிக்கின்றன. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் சென்னையின் எப்.சி. - ஜேம்ஷெட்பூர் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #KeralaBlastersFC #NorthEastUnitedFC
    Next Story
    ×