search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 உலகக்கோப்பைக்கு முன் 30 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்தியா
    X

    2019 உலகக்கோப்பைக்கு முன் 30 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது இந்தியா

    இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா 30 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. #TeamIndia #BCCI
    இந்திய அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் (இந்தியா, இலங்கை, வங்காள தேசம்) தொடரில் விளையாடுகிறது. இத்துடன் இந்தியாவின் 2017-18 சீசன் முடிவடைகிறது.

    அதன்பின் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். பின்னர் 2018-19 சீசன் ஆரம்பமாகிறது. இந்த சீசனில் சுமார் 63 சர்வதேச போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. 2019-ம் ஆண்டும் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கு முன் இந்தியா 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி தங்களை தயார் படுத்துகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் 2018-19-ன் சுற்றுப் பயண விவரம்:-

    ஜூன் மாதம் அயர்லாந்து சென்று இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின் டெஸ்ட் போட்டிக்கு அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தானுடன் முதன்முறையாக இந்தியா மோதுகிறது.

    ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து செல்கிறது. அங்கு 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இங்கிலாந்து சென்று திரும்பியதும் செப்டம்பர் மாதம் ஆசியக்கோப்பை தொடரில் விளையாடுகிறது. இதில் தோராயமாக 9 ஒருநாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்க இருக்கிறது.

    அக்டோபர்-நவம்பர் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்து இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் பேட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    நவம்பர் - டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.



    2019 ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து சென்று 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    பிப்ரவரி - மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா இந்தியா வந்து 5 ஒருநாள் மற்றும் 2 டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

    மார்ச் மாதம் ஜிம்பாப்வே இந்தியா வந்து 3 டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

    மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஜிம்பாப்வே தொடர் முடிந்த உடன் இந்தியா ஐபிஎல் தொடரை நடத்திவிட்டு, அதன்பின் நேராக உலகக்கோப்பை தொடருக்கு செல்ல வாய்ப்புள்ளது.
    Next Story
    ×