search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி படைத்த சாதனைகள் முழுவிவரம்
    X

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி படைத்த சாதனைகள் முழுவிவரம்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 558 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். அதை விவரமாக பார்ப்போம்....
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 558 ரன்கள் குவித்தார். இதில் மூன்று முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். இதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அதை வரிசையாக பார்ப்போம்....

    1. 558 ரன்கள் குவித்ததன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் 500 ரன்களை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    2. இதற்கு முன் ஒரே தொடரில் சச்சின் தெண்டுல்கர் 500 ரன்களை தாண்டியுள்ளார். விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    3. நேற்றைய சதம் மூலம் கேப்டனாக 13 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங் முதல் இடத்தில் உள்ளார்.



    4. சர்வதேச போட்டிகளில் அதிக சதம் (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடம்

    5. நேற்றைய ஆட்ட நாயகன் விருது மூலம் 28 முறை பெற்று சச்சின் தெண்டுல்கர், கங்குலிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

    6. இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் ரோகித் சர்மா 491 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்துள்ள கோலி, சராசரி 198 வைத்துள்ளார்.

    7. ஒரே தொடரில் மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் கெவின் பீட்டர்சன் சாதனையை சமன் செய்துள்ளார்.

    8. 200 இன்னிங்சில் 9500 ரன்களை தாண்டியுள்ளார்.

    9. 2000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் 58.1 சராசரி வைத்து உச்சத்தில் உள்ளார்.



    10. மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் கோலிதான். டெஸ்டில் 53.40, ஒருநாள் போட்டியில் 58.10, டி20யில் 52.86 ஆகும்.

    11. இவரின் 35 சதத்தில் 30 சதங்கள் வெற்றியை தேடிக் கொடுத்ததாகும்.

    12. இரண்டு கேட்ச்கள் பிடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100-வது கேட்சை பதிவு செய்தார். ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார்.
    Next Story
    ×