search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வழியில் இலங்கை
    X

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் வழியில் இலங்கை

    இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடரை நடத்துவது போல் இலங்கையும் டி20 லீக் தொடரை நடத்த இருக்கிறது. #LPL
    இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008-ம் ஆண்டு இந்தியன் பிரி்மீயர் லீக் (ஐபிஎல்) என்ற டி20 தொடரை அறிமுகப்படுத்தியது. இதற்கு சர்வதேச அளிவில் மிகக்பெரிய வரவேற்பு கிடைத்தது. வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைப்பதுடன், பிசிசிஐ-யும் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது.

    இதையடுத்து ஆஸ்திரேலியா பிக் பாஷ் என்ற டி20 லீக் தொடரையும், வெஸ்ட் இண்டீஸ் கரிபீயன் பிரிமீயர் லீக் தொடரையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடரையும், வங்காள தேசம் கிரிக்கெட் வாரியம் வங்காள தேச பிரிமீயர் லீக் தொடரையும் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் லங்கன் பிரி்மீயர் லீக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என இலங்கை அறிவித்துள்ளது.

    இந்த காலக்கட்டத்தில் இலங்கை அணி எந்தவிதமாக சர்வதேச தொடரிலும் பங்கேற்கவில்லை. அதேவேளையில் கரிபீயன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த தொடரில் 6 அணிகள் பங்குபெறும். தொடக்க சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை விளையாடும்.
    Next Story
    ×