search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடி சாதனை நாயகன் 360 டிகிரிக்கு இன்று பிறந்த நாள்
    X

    அதிரடி சாதனை நாயகன் 360 டிகிரிக்கு இன்று பிறந்த நாள்

    அதிவேக அரைசதம், சதம் மற்றும் 150 ரன்கள் போன்ற சாதனைக்கு சொந்தக்காரரான 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் இன்று 34-வது வயதில் கால்பதிக்கிறார். #ABD
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். பின்னர் அதிரடி பேட்ஸ்மேனாக மாறினார். முதுகு வலி காரணமாக விக்கெட் கீப்பர் பணியை தவிர்த்து முழு நேர பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறது.

    2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 31 பந்தில் சதம் அடித்து, அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 16 பந்தில் அரைசதம், 64 பந்தில் 150 ரன்கள் என்ற சாதனையையும் பெற்றார். இவரது சாதனையை ஒருநாள் போட்டியில் முறியடிப்பது மிகக்கடினம் என்றே கூறலாம்.

    களத்தில் இறங்கிவிட்டால், தீப்பொறியாக செயல்படும் இவரை செல்லமாக ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள். கிரிக்கெட் வரையறைக்கு உட்பட்ட ஷாட்டுகளை ஆடாமல், தன் இஷ்டபடிக்கு விளையாடுவார். மைதானத்தில் எல்லா திசைகளுக்கும் பந்தை பறக்க விடுவார். இதனால் ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள். இவர் இன்று தனது 33 வயது பூர்த்தி செய்து 34-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.



    டி வில்லியர்ஸ் ஒருநாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் 2005-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். இதற்கு முன்னரே டெஸ்ட் போட்டியில் 2004-ம் அண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

    சுமார் 14 வருடமாக தென்ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ் தற்போதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8338 ரன்கள் குவித்துள்ளார். 21 சதங்கள், 42 அரைசதங்களுடன் சராசரி 49.92 வைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 278 ரன்னாகும்.

    228 ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள், 53 அரைசதங்களுடன் 9577 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.50 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 176 ரன்னாகும். 78 டி20 போட்டியில் 10 அரைசதங்களுடன் 1672 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 79 ரன்னாகும்.
    Next Story
    ×