search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    36 வயதில் நம்பர் 1: பெடரர் புதிய சாதனை படைத்தார்
    X

    36 வயதில் நம்பர் 1: பெடரர் புதிய சாதனை படைத்தார்

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு நுழைந்துள்ளதை அடுத்து 36 வயதில் முதல் இடத்தை பிடித்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். #RogerFederer
    ரோட்டர்டாம்:

    நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) அரை இறுதிக்கு நுழைந்தார். அவர் ராபின் ஹாசை 4-6, 6-1, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தினர்.

    இதன் மூலம் உலக தர வரிசையில் பெடரர் முதல் இடத்தை மீண்டும் பிடித்தார். 36 வயதில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்தார்.

    இதற்கு முன்பு ஆந்த்ரே அகாசி 33 வயதில் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.
    Next Story
    ×