search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கார் யூனிசை முந்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான்
    X

    வக்கார் யூனிசை முந்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான், பாகிஸ்தானின் வக்கார் யூனிசை முந்தினார்.
    ஷார்ஜா:

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ஜத்ரான், பாகிஸ்தானின் வக்கார் யூனிசை முந்தினார்.

    சார்ஜாவில் நேற்று நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக இளம் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் ஜத்ரான், 50 ரன்கள் மட்டுமே  விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் ஜிம்பாப்வே அணி 38 ஓவர்களில் 134 ரன்களுக்குள் சுருண்டது.  

    பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 21.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. முகமத ஷாஜத் 75 ரன்களும், இஷானுல்லா 51  ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின்மூலம் ஆப்கானிஸ்தான் அணி  5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றி உள்ளது.

    இந்த போட்டியில் முஜீப் ஜத்ரான் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தானின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த முன்னாள் கேப்டன் வக்கார் யூனிசின் சாதனையை முறியடித்துள்ளார்.



    1990ம் ஆண்டு சார்ஜா ஸ்டேடியத்தில் வக்கார் யூனிஸ் இலங்கைக்கு எதிரான போட்டியில் 26 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். அப்போது, அவருக்கு வயது 18 ஆண்டுகள் 164 நாட்கள். இதுவே குறைந்த வயதில் 5 விக்கெட் என்ற சாதனையாக இருந்தது. தற்போது முஜீப் சத்ரன் 16 வயது 325 நாட்களில் அந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

    சாதனை படைத்த முஜீப் ஜத்ரானுக்கு ஆப்கான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. #tamilnews
    Next Story
    ×