search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தார் ஓபன் தொடரின் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஹலெப் காயம் காரணமாக விலகினார்
    X

    கத்தார் ஓபன் தொடரின் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஹலெப் காயம் காரணமாக விலகினார்

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற சிமோனா ஹலெப் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரைவிட்டு விலகியுள்ளார். #QatarOpen2018 #CarolineWozniacki #SimonaHalep
    தோகா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, எட்டாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்செலிக் கெர்பரை எதிர்கொண்டார்.

    இப்போட்டியின் முதல் செட்டை 7-5 (7-4) என வோஸ்னியாகி போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை கெர்பர் 6-1 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டை வோஸ்னியாகி 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (7-4), 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற வோஸ்னியாகி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், சிமோனா ஹலெப்பும், அமெரிக்காவின் சிசி பெல்லிசும் மோதினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹலெப் முதல் இரண்டு செட்டையும் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார். இருப்பினும் இந்த போட்டியின்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.



    மற்றொரு போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் முகுருசா, பிரான்சின் கரோலின் கார்சியாவை 6-3, 1-6, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேரினார்.

    கடைசி காலிறுதி போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவும், ஜெர்மனியின் ஜூலியா கார்ஜசும் மோதினர். இதில் ஜூலியா கார்ஜஸ் காயம் காரணமாக விலகியதை அடுத்து கிவிடோவா அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் பெட்ரா கிவிடோவா, கரோலின் வோஸ்னியாகியை எதிர்கொள்ள இருக்கிறார். ஹலெப் விலகியதையடுத்து முகுருசா நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். #QatarOpen2018 #CarolineWozniacki #SimonaHalep #GarbineMuguruza #PetraKvitova
    Next Story
    ×