search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை
    X

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 கேட்ச்கள் பிடித்து டோனி புதிய சாதனை

    தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச் பிடித்து அசத்தினார். #MSDhoni #Thirdwicketkeeper #600internationalcatches
    செஞ்சுரியன்:

    தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியது.

    இப்போட்டியில், தென்ஆப்ரிக்க வீரர் ஹாசிம் அம்லா, சர்துல் தாகூர் வேகத்தில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் 600-வது கேட்ச் ஆகும். இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இதில் 600 கேட்ச்களும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும்.

    டோனி 144 டெஸ்ட் இன்னிங்சுகளில் 256 கேட்ச்களும், 272 ஒருநாள் போட்டிகளில் 296 கேட்ச்களும், 75 டி20 போட்டிகளில் 47 கேட்ச்களும் பிடித்துள்ளார். இப்பட்டியலில் தென்ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (952 கேட்ச்கள்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (813 கேட்ச்) முதல் இரண்டு இரண்டங்களில் உள்ளனர்.

    முன்னதாக கடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டோனி, முதல் தர போட்டியில் 500 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார். இதே போல 3-வது ஒருநாள் போட்டியில், 50 ஓவர் போட்டிகள் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.

    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டோனி இன்னும் 33 ரன்கள் எடுத்தால் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 12-வது வீரராக இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. #Dhoni #MSDhoni #Thirdwicketkeeper #600internationalcatches
    Next Story
    ×