search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் கிரிக்கெட்டில் 2-வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
    X

    பெண்கள் கிரிக்கெட்டில் 2-வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. #SAWvINDW
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றார்கள்.

    இந்நிலையில் 2-வது ஆட்டம் கிழக்கு லண்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தனர். அந்த அணியின் லூயஸ் 33 ரன்களும், டி கிளெர்க் 26 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் மிதலி ராஜ், எஸ் மந்தனா களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மந்தனா 42 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிதலி ராஜ் - மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 106 ரன்கள் சேர்த்தது.



    அடுத்து மிதலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவும் ஜோடி சேர்ந்தார். மிதலி ராஜ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய பெண்கள் அணி 19.1 ஓவரில் 144 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிதலி ராஜ் 61 பந்தில் 76 ரன்கள் எடுத்தும், கவுர் 12 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி 18-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.
    Next Story
    ×