search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனின் பனிச்சறுக்கை காண 17 ஆயிரம் கி.மீ. சைக்கிளில் வந்த தம்பதி
    X

    மகனின் பனிச்சறுக்கை காண 17 ஆயிரம் கி.மீ. சைக்கிளில் வந்த தம்பதி

    குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மகனின் பனிச்சறுக்கு விளையாட்டை கண்டு ரசிக்க அவரது தாய், தந்தையினர் 17 ஆயிரம் கி.மீ. சைக்கிளில் பயணம் செய்ததுள்ளனர்.
    பியாங்சாங்:

    தென் கொரியாவில் பியாங்சாங் என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிஸ்சா கேசர் என்ற வீரர் கலந்து கொண்டார்.

    அவரது விளையாட்டை கண்டு ரசிக்க அவரது தந்தை குய்டோ ஹுவீலர் (55), வளர்ப்பு தாய் ரீட்டா ரியூடிமான் (57) ஆகியோர் சைக்கிள் பயணமாக தென் கொரியாவின் பியாங்சாங் வந்தனர்.

    இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் சூரிச் அருகே 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஓல்டன் நகரில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டனர். ஓராண்டு 320 நாடுகள் வழியாக 17 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்து பியாங் சாங் நகரை அடைந்தனர்.

    அங்கு தங்களது மகனின் பனிச்சறுக்கு சாகச விளையாட்டை கண்டு ரசித்தனர். குய்டோ ஹுவிலரும், அவரது மனைவி ரீட்டா ருயட்டிமானும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது எங்களது சைக்கிள் பயணம் கடுமையான சவால் நிறைந்ததாக இருந்தது மத்திய ஆசிய நாடுகளை கடக்க 4 ஆயிரம் மீட்டர் உயரமான மேடுகளை கடக்க வேண்டியிருந்தது. இதனால் மிகவும் களைப்படைந்தோம்.

    ஹுவலர் தாடி வைத்திருந்ததால் சீனாவில் எங்களுக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் பயணம் செய்ய அனுமதித்தனர் என்றனர். #tamilnews
    Next Story
    ×