search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பாக விளையாடியும் அணியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது: சுரேஷ் ரெய்னா
    X

    சிறப்பாக விளையாடியும் அணியில் இருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது: சுரேஷ் ரெய்னா

    சிறப்பாக விளையாடியும் அணியில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளித்தது என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.#Raina
    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    இதற்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டு உள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் யோ-யோ சோதனையில் தோல்வி அடைந்ததால் சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டார்.

    உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அணிக்கு தேர்வாகவில்லை. அதன் பின்னர் கடும் பயிற்சி செய்து யோ- யோ சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்காக சுரேஷ் ரெய்னா தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

    அணிக்கு மீண்டும் திரும்பியது பற்றி ரெய்னா கூறியதாவது:-

    நான் சிறப்பாக விளையாடியும் அணியில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளித்தது. தற்போது நான் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றேன். மிகவும் வலிமையானதாக உணர்கிறேன். அணியில் இருந்து நீக்கப்பட்ட கால கட்டத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்தேன். மீணடும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற ஆசைதான் வலிமையானதாக மாற்றியது.

    என்னால் எவ்வளவு காலம் விளையாட முடி யுமோ அவ்வளவு காலம் நான் விளையாட விரும்புகிறேன்.

    2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவதே இலக்கு. இன்னும் எனக்கான போட்டிகள் நிறைய உள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கையுடன் உள்ளேன். எனது கடினமான காலங்களில் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெய்னா கடைசியாக 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடி இருந்தார்.
    Next Story
    ×