search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா
    X

    தென்ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருக்கிறது: ஹசிம் ஆம்லா

    இந்தியாவிடம் ஏற்பட்ட தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருப்பதாக அந்த அணியின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா தெரிவித்துள்ளார். #SAvIND #HasimAmla
    செஞ்சூரியன்:

    தென்ஆப்பிக்க கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான 6 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இழந்தது.

    இதுவரை நடந்துள்ள 5 ஆட்டத்தில் 4 போட்டியில் தோற்றது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளும் மோதும் 6-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று செஞ்சூரியன் நகரில் நடக்கிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியில் இருப்பதாக அந்த அணியின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டியில் நாங்கள் இதற்கு முன்பு இதுபோன்ற (இந்தியாவிடம் தோல்வி) கடினமான சூழ்நிலையில் இருந்ததில்லை. ஆனாலும் தோல்வியில் இருந்து எப்போதும் கற்று வருகிறோம். அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளார்கள். நாங்கள் எங்களின் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    இனி வரும் மற்ற தொடர், உலக கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயார் ஆகுவோம். கடந்த காலங்களில் பல தொடர்களை வென்று இருக்கிறோம். ஆனால் இது போன்று தொடரை இழந்தால் மீண்டும் எழுச்சி பெறுவது மிகவும் அவசியம்.

    ஒருநாள் போட்டியில் எப்போதும் புதுப்புது வி‌ஷயங்களை தேடி கொண்டே இருக்க வேண்டும். நான் நிச்சயமாக சொல்கிறேன். நாங்கள் உத்வேகமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்.

    தொடரை இழக்கும்போது அதில் இருந்து மீண்டு வருவதில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் இல்லை.

    இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணிக்கு எதிராக எந்தவிதமான அனுபவம் கிடைத்தாலும் அதில் இருந்து கற்று கொண்டு முன்னேடுத்து செல்ல வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் கிடைத்த நல்ல வி‌ஷயங்களை பார்க்க வேண்டும்.

    இந்தியாவின் சுழற்பந்து கூட்டணி குல்தீப் யாதவ்- சாஹல் முக்கிய பங்காற்றி உள்ளனர். பொதுவாக தென்ஆப்பிரிக்க மண்ணில் சுழற்பந்து வீரர்கள் சாதிக்க முடியாது. ஆனால் அவர்கள் முதல் 3 போட்டியில் நன்றாக செயல்பட்டனர். அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாகதான் விளையாடினோம். ஆனால் உண்மையில் அவர்கள் வித்தியாசமாக பந்து வீசினர்.

    மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டனர். இதனால் ரன்களை குவிக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×